Brahma Kumaris, Sri Lanka ...

நல்லதோர் உலகிற்கான ஆன்மீக விழிப்புணர்ச்சி

நல்லதோர் உலகிற்கான ஆன்மீக விழிப்புணர்ச்சி …


பிரம்ம குமாரிகளின் தொலைநோக்கானது நற்குணங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும் அமைதிää தூய்மைää மகிழ்ச்சி நிலவும் ஒரு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலமும் நல்லதோர் உலகிற்கான ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்குவதாகும்.

ஒவ்வொரு மனிதனினதும் இதயத்தில் பதிந்துள்ள நற்குணங்களை தெரிந்து கொள்வதினால் பிரம்மகுமாரிகள் இராஜயோகத்தின் இடைவிடாத பயிற்சி மற்றும் அமைதியான நியமங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த நற்குணங்களை வளர்த்து வருகின்றனர். பிரம்hகுமாரிகள் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேல் தமது தொடர்ச்சியான சேவை மூலம் பல்லாயிரக்கணக்கான இலங்கை வாழ் மக்கள் தமது வாழ்க்கையில் தூய்மைää அமைதிää அன்பு மகிழ்ச்சி போன்ற நற்குணங்களை கடைப்பிடிக்ககூடியதாகவும் உறுதியான அனுபவமாகவும் ஆக்கியுள்ளார்கள். எமது முயற்சிகளின் அங்கீகாரமாக 1998 இல் எமது நிறுவனம் இலங்கை ஜனநாயகசோசலிச குடியசின் 37/98 ஆம் இலக்கப் பராளுமன்றசட்டத்தின் கீழ் ஓன்றிணைக்கப்பட்டுள்ளது.

ஒரு முன்னணி ஆன்மீக நிறுவனம் என்ற வகையில் சகல பின்புல மக்களுக்கும் தம்தைப்பற்றி ஆழமாக பரிசோதிப்பதற்கு ஒரு வாய்ப்பை அளிப்பதுடன் மக்களின் இயல்பான நற்குணங்களையும் சக்திகளையும் விருத்திசெய்ய உதவும் வகையில் பல்வகைப் பயிற்சிபிரிவுகளிலும் கலந்து கொள்ளக்ககூடிய ஒரு வாய்ப்பையும் பிரம்மகுமாரிகள் வழங்குகின்றார்கள்.

இப்பொழுது இந்த விருட்சம் நாடளாவியரீதியில் 75க்கு மேற்பட்ட நிலையங்களிலும் உபநிலையங்களிலும் வகுப்புகளிலும் 5000 அங்கத்தவர்களுடன் வளர்ந்துள்ளது.

தியானம் …


lotus_home_blur

தியானம் என்பதன் அர்த்தம் எங்கள் மின்கலத்திற்குச் சக்தி ஊட்டுவதாகும். எந்த வேலையைச் செய்யும் பொழுதும் உங்களால் தியானம் செய்ய முடியும். வேலைசெய்தல்ää உலாவுதல்; ää பாடுதல் முதலியன. அது அவ்வளவு இலகுவானதும் எளிமையானதும் ஆகும். ஆனால் சக்தி வீட்டுடன் சரியான தொடர்பினை கொண்டிருத்தல் முக்கியமானதாகும். ஆகையால் இது சம்பந்தமாக எளிமையான தெளிவான விளக்கத்தைப் பெற்று நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் அன்றாட விடயங்களில் மிக நல்ல நன்மைகளை பெறுவதற்கு இது உண்மையில் உங்களுக்கு உதவும். உங்களால் சந்தோஷத்தின் உண்மையான நிலையை உணர்ந்து கொள்ள முடிவதுடன் உங்களதும்ää அதே போல் மற்றவர்களதும் மதிப்பை உணர்ந்து கொள்ளமுடியும்… அதற்கு முயற்சி செய்யுங்கள்… மகிழ்ச்சியை வென்றவர் ஆகுங்கள்…

 

 

 


No Post Found.

Regular Events …





Share this: